Homeசெய்திகள்மாவட்டம்'ஜனநாயகன்' திரையிடலில் தேர்தல் தோல்வி வீடியோ: விருதுநகரில் திரையரங்கை முற்றுகையிட்ட தேமுதிகவினர்!

‘ஜனநாயகன்’ திரையிடலில் தேர்தல் தோல்வி வீடியோ: விருதுநகரில் திரையரங்கை முற்றுகையிட்ட தேமுதிகவினர்!

-

- Advertisement -

விருதுநகரில் ‘ஜனநாயகன்’ திரைப்படச் சிறப்புக் காட்சியின் போது, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் தேர்தல் தோல்வி குறித்த வீடியோவை ஒளிபரப்பியதைக் கண்டித்து, திரையரங்கை 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜனநாயகன்

we-r-hiring

திரையரங்கில் ஒளிபரப்பப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ

விருதுநகரில் உள்ள 3 திரையரங்குகளில் நடிகரும் முதல்வருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் தவெக சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அமிர்தராஜ், ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியைக் காணத் திரையரங்கிற்கு வந்திருந்தார்.

அப்போது எம்.எல்.ஏ தரப்பில் தயாரித்துத் திரையிடப்பட்ட பிரத்யேக வீடியோ ஒன்றில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் “தேர்தல் தோல்வி” தொடர்பான செய்தித் தொலைக்காட்சிப் பதிவுகள் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், எம்.எல்.ஏ செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்சிகளும் வெற்றிக்குப் பிந்தைய நிகழ்வுகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

தேமுதிகவினர் கொந்தளிப்பு – திரையரங்கு முற்றுகை

அரசியல் நாகரிகமின்றி, மறைந்த தலைவர் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனின் தேர்தல் முடிவை வைத்துப் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கூடியிருந்த திரையரங்கில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பியதற்குத் தேமுதிகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அமிர்தராஜ் திரையரங்கைத் தேமுதிக நகரச் செயலாளர் ஏங்கல்ஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் தடுப்புகளைக் (Barricades) கொண்டு போராட்டக்காரர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், ஆத்திரமடைந்த தேமுதிகவினர் அந்தத் தடுப்புகளைத் தள்ளிவிட்டுத் திரையரங்கின் நுழைவாயில் முன் திரண்டு தவெக எம்.எல்.ஏ-விற்கு எதிராகக் கோஷமிட்டனர்.

தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் காவல்துறையினர் தேமுதிகவினரைத் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!

MUST READ