Homeசெய்திகள்மாவட்டம்தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர்...

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

-

- Advertisement -

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

we-r-hiring

சம்பவத்தின் பின்னணி:

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், கடந்த 17-ஆம் தேதியன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த 24-ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டது.

குடும்பத்தினரின் கோரிக்கைகள்:

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமயன்று (ஜூலை 26) அமுதா நகரில் உள்ள அருணாச்சலத்தின் இல்லத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது தாய், தந்தை மற்றும் தம்பியை நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அருணாச்சலத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அருணாச்சலத்தின் குடும்பத்தினர் முன்னாள் அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட நான்கு காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக முதல்வர் (விஜய்) அவர்களிடம் கேள்வி எழுப்பி நீதி பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரினர். மேலும், குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குடும்பத்தினரின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக உரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இச்சந்திப்பு அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தவெக பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆஜர்; தனித்தனியாக 1.5 மணி நேரம் தீவிர விசாரணை!

MUST READ