அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அதிமுக ஊழல் கறை படிந்த கட்சி, கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தவர்கள், தனித்து நிற்க தைரியமில்லாதவர்கள் என விமர்சித்து இருந்தார். இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மானாமதுரை அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான மணலூர் மணிமாறன் மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பாக நடிகர் விஜய் – ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். போஸ்டரில் ” கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டு, அதிமுக யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார். திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுனரின் மனிதநேய செயல்…கிராமசபையில் பாராட்டி கௌரவித்த சட்டமன்ற உறுப்பினர்….


