spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - 3 பேருக்கு சாகும் வரை சிறை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை

-

- Advertisement -

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு -  3 பேருக்கு சாகும் வரை சிறைமதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் காரின் அருகே வந்து பார்த்துள்ளனர். காரில் உள்ளே ஆண் நண்பரும் கல்லூரி மாணவியும் இருந்ததை பார்த்து, வெளிய வர கூறி உள்ளனர். ஆனால் அவா்கள் மதுபோதையில் இருந்த மா்மநபா்களை கண்டு அஞ்சி காருக்குள்ளேயே இருந்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று போ் கொண்ட கும்பல் அந்த ஆண் நண்பரை சராமாாியாக தாக்கினா். இதனால் அவா் மயக்கமடைந்தாா். பின்னா் மாணவியை கடத்தி சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இச்சம்பவம்  நாட்டையே உலுக்கியது இதன் காரணமாக பெண்கள் மிகவும் பயந்தே வெளியில் செல்ல வேண்டிய சூழல் உருவானது.

இந்நிலையில், சிவகங்கையை சோ்ந்த சதீஷ், காா்த்திக், தவசி ஆகியோரை காவல்துறையினர் சுட்டு பிடித்து, எட்டு பிாிவுகளின் கீழ் கைது செய்தனா். இந்த சம்பவம் தொடா்பான வழக்கு கோவை அனைத்து மகளிா் காவல் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தா்ராஜன் முன்னிலையில் விசாரணை நடைப் பெற்று வந்தது. இதனை தொடா்ந்து வழக்கின் தீா்ப்பு 7 ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி தொிவித்து இருந்தாா்.

we-r-hiring

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கும் என எதிா்பாா்த்த நிலையில், தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முன்னதாக பலாத்கார வழக்கில் தொடர்புடைய கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை, கோவை மகிளா நீதிமன்றத்தில் காவல் துறையினா் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு கதவுகள் மூடப்பட்டன. பின்னர் 2.05 மணியளவில் நீதிபதி சுந்தராஜன் கோர்ட் அறைக்கு வந்தார். பின்னர் அவர் தீர்ப்புகளை வாசிக்கத் தொடங்கினார்.

கருப்புசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்றம் தீா்ப்பு அறிவித்த நிலையில், குற்றவாளிகளுக்கு சாகும் வரை தண்டனையையும் விதித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், மாணவியின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும் அரசு வழங்க வேண்டும் என கோவை மகிளா நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. கோவை மாணவி வழக்கை 22 நாட்களில் அரசுதரப்பு விசாரணையை முடித்து வழக்கறிஞா் ஜிஷாவுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

MUST READ