Homeசெய்திகள்மாவட்டம்திருத்தணி ஆடி கிருத்திகை: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருத்தணி ஆடி கிருத்திகை: திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

-

- Advertisement -

திருத்தணி முருகன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருத்தணி

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உலகப் புகழ்பெற்ற ஆடி கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி (06.08.2026) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

இருப்பினும், அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு அன்றைய தினம் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக (Working Day) அறிவிக்கப்படுகிறது என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

MUST READ