மருதமலை சாலையில் தொடரும் ஒப்பந்தப் பணிகளால் வாகன ஓட்டிகள் அவதி.
கோவை வடவள்ளி அருகே மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட ஆழமான குழியில் இளம் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்துடன் (ஸ்கூட்டி) எதிர்பாராதவிதமாக விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பாராமல் நடந்த விபத்து:
கோவை வடவள்ளி – மருதமலை பிரதான சாலையில் நீண்டநாட்களாகப் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காகச் சாலையின் ஓரத்தில் ஆழமான குழிகள் தோண்டப்பட்டு முறையான தடுப்புச் சுவர்களோ அல்லது போதிய எச்சரிக்கைப் பலகைகளோ வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டியுடன் அப்படியே அந்த குழியில் விழுந்தார்.
ஜே.சி.பி மூலம் மீட்பு:
திடீரெனப் பெண் குழியில் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரும், பாதாள சாக்கடைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கிருந்த ஜே.சி.பி (JCB) இயந்திரத்தின் உதவியுடன், குழியில் இருந்த பெண்ணையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பத்திரமாக மேலே மீட்டனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
அதிர்ஷ்டவசமாக அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருதமலை சாலையில் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்படும் குழிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், பணிகளை விரைந்து முடித்து அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையிலும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.
