25 சவரன் தங்க நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு கிராம சபையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.ராஜா அவர்கள் பாராட்டினார்.
தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நேர்மையின் அடையாளமாக 25 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பாராட்டி கௌரவித்தார்.

முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (47) என்பவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் வண்டலூர்–மீஞ்சூர் புறவட்ட சாலையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது, சாலையோரத்தில் கிடந்த மகளிர் கைப்பையை அவர் கண்டெடுத்துள்ளார். அதை திறந்து பார்த்தபோது, அதில் 25 சவரன் தங்க நகைகள் மற்றும் கைபேசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவர் அந்த கைப்பையை 12-வது வார்டு கவுன்சிலர் சத்தியா சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்தார். கைபேசியில் இருந்த தகவலின் மூலம் உரிமையாளரை தொடர்பு கொண்டு வரவழைத்த கவுன்சிலரும், ஆட்டோ ஓட்டுனர் தங்கராஜும், தங்க நகைகளை உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர். நகைகளை மீட்டுக் பெற்ற பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்ற நிலையில், இன்று நடைபெற்ற முடிச்சூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுனர் தங்கராஜ் அழைக்கப்பட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, செயலர் வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி, மர்ம ஆசாமி உள்ளே நுழைந்ததால் பரபரப்பு…


