விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் மாவட்டம் சூரப்பாளையம் பகுதியில் உள்ள 21 பெண்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக விழுப்புரத்தில் இருந்து பொன்னேரி சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு மினி பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்து சென்னை வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக சென்றுள்ளது. சுமார் 21 பேர் பயணித்த இந்த பேருந்தை திருப்பாலைவனம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டி சென்று உள்ளார். வாகனம் வெளிவட்ட சாலை வழியாக ஆவடி அருகே காட்டூர் பகுதியை கடந்த போது வேன் ஓட்டுநர் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழுந்து அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 20 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த ரவேகா என்ற 20 வயது இளம்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்த பெண்களை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போக்குவரத்தினையும், நெரிசலையும் கட்டுப்படுத்தினர். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாகனத்தை ஓட்டி வந்த மோகன் தூக்க களத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழுந்து வாகனம் விபத்துக்குள்ளானது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி – ச.இராமதாஸ் ஆவேசம்


