spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் – நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்

ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் – நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்

-

- Advertisement -

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் – நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள அறிவாலயம் அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-த்திற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு. எனவே, “நானும் டெல்டாக்காரன் தான்” என விளம்பர வசனம் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ₹50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாா்.

செண்பகத் தோப்பு அணையிலிருந்து வினாடிக்கு 375 கன அடி நீர் வெளியேற்றம்…

we-r-hiring

MUST READ