spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…

இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையப்பாளருமான சபேசன் உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானாா். அவருக்கு வயது 68. இளையராஜாவிடம் இசையை அறிந்தவா். இசை தென்றலின் சகோதரர்களில் மிக முக்கியமானவர். அண்ணனின் இசைக்கு கீபோர்டில் உயிர் கொடுத்தவர். சகோதரர் முரளியுடன் இணைந்து தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். சபேஷ் என்கின்ற சபேசன்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று திரும்பிய அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. மூச்சுப் பேச்சில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மதியம் 12:15 மணிக்கு சபேசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனா். அவரது மறைவு இசை குடும்பத்திற்கு மட்டுமல்ல இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

we-r-hiring

மேலும், தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளி, பீன்ஸ் விலை “மளமளவென”குறைவு

MUST READ