அரியலூரில் ஆட்டோவில் பெரியார் திடலுக்கு சென்ற போது ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தேன்மொழி தனது குடும்பத்துடன் பெரியார் திடலில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார். அசோக் நகரில் இருந்து ஆட்டோவில் பெரியார் திடலுக்கு வந்து இறங்கிய போது, 1.5 லட்சம் பணப்பையை ஆட்டோவிலேயே மறந்துவிட்டுள்ளார். பணத்தை மறந்து அழுத தேன்மொழியை ஆறுதல்படுத்தி விசிக தலைவர் திருமாவளவன் பார்த்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். வேப்பேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சியில் ஆட்டோவின் எண்ணை வைத்து செல்போன் எண்ணை எடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் பேசி உள்ளனர்.
அப்போது ஆட்டோவில் தான் பணம் இருப்பதாக தெரிவித்த நிலையில், உடனடியாக ஆட்டோ ஓட்டுநர் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் தேன்மொழியிடம் காணாமல் போன 1.5 லட்சம் பணப்பையை போலீசார் ஒப்படைத்தனர். ஒரு மணி நேரத்தில் பெண் தொலைத்த 1.5 லட்சம் பையை மீட்டு ஒப்படைத்த வேப்பேரி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
மக்களின் வரிபணத்தை விளம்பரத்திற்கு வீணடிக்கிறார்கள் – அண்ணமலை குற்றச்சாட்டு



