ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில் வசிப்பவர் நாராயண ராவ் (62) இவரது வீட்டின் எதிர் வீட்டில் 13 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் சிறுமி படிக்கும் பள்ளிக்கு சென்ற நாராயண ராவ் சிறுமியின் தாத்தா என்று கூறி ஊசி போட வேண்டும் என பள்ளியில் ஆசிரியர்களிடம் கூறி அழைத்து சென்றுள்ளாா். சிறுமியும் நாராயண ராவை தாத்தா என்றதால் ஆசிரியை அனுப்பி வைத்தார். சிறுமியை அழைத்து சென்று ஊரில் புறநகர் பகுதியில் சிறுமியை பாலியியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணராவை கைது செய்து விசாரணை செய்ததில் சிறுமியை இதே போன்று மூன்று முறை அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதன் காரணமாக நாராயண ராவ் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாராயண ராவை நீதிபதி வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்றபோது போலீசாரிடம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் போலீசார் நாராயண ராவை வாகனத்தில் இருந்து கீழே இறக்கினர். உடனடியாக அருகில் இருந்த ஏரியில் குதித்துள்ளார். போலீசார் நாராயண ராவை மீட்க முயன்றுள்ளனா். இருப்பினும் இன்று காலை சடலமாக ஏரியில் இருந்து நாரயண ராவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடூர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…



