விழுப்புரம் வீடூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 4,410 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியை எட்டியதால் 3 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. வீடூர் அணையின் ஒரு மதகு வழியாக 600 கனஅடி உபரி நீர் சங்கராபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. வீடூர் அணை நீர் திறப்பு காரணமாக சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுர், பெரம்பூர், சிறுவை, கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்ஃபி எடுப்பது போன்ற எந்த விதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



