Homeசெய்திகள்மாவட்டம்ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!

-

- Advertisement -

ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்டு வரகோரி, மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க கண்ணீர் மல்க மனு!!கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலந்துறை, குறும்பனை, கொட்டில்பாடு,குளச்சல், கடியப்பட்டணம் உட்பட பல்வேறு  கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், வாழ்வாதாரத்திற்காக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றிருந்தனர். தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழல் மற்றும் பதற்றமான நிலை காரணமாக, அவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் நடுக்கடலிலேயே தவித்து வருகின்றனர். இது குறித்து மீனவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர். அதில், தற்போது உயிருக்கு பயந்த நிலையில் கடலில் தங்கியுள்ளோம். எங்களிடம் இருக்கும் உணவு மற்றும் குடிநீர் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் அபாயம் உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் மிகுந்த மன அழுத்தத்திலும், மரண பயத்திலும் இருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் மீனவர்களுள் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொட்டில்பாடு மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது உறவினர்களை ஈரான் நாட்டில் இருந்து மீட்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்.

மீண்டும் எழுந்த எல்லை பிரச்சனை – தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்….

we-r-hiring

MUST READ