Homeசெய்திகள்க்ரைம்விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…

விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று பேர் கைது…

-

- Advertisement -

விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று  பேர் கைது செய்யப்பட்டனா்.விருதுநகர்: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை!! மூன்று  பேர் கைது…விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரலொட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி கடந்த 10-ம் தேதி இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு  வரலொட்டி  கிராமத்தைச் சார்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (20) என்பவருக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  திருப்பதி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

we-r-hiring

இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மணிகண்டன் அவருடைய நண்பர்களான இருளப்பன் (25) ராஜா (20) உள்ளிட்ட 4 நபர்களுடன் சேர்ந்து கடந்த 10-ம் தேதி இரவு திருப்பதி தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் வரலொட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

மல்லாங்கிணறு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், இருளப்பன், ராஜா ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை மல்லாங்கிணறு போலீசார் தேடி வருகின்றனர்.

இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து கொள்ளையடித்த கும்பல் கைது!!

MUST READ