Homeசெய்திகள்மாவட்டம்கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்: நிலம், வாழ்வாதாரத்தைக் காக்க பொதுமக்கள் திரண்டனர்!

கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்: நிலம், வாழ்வாதாரத்தைக் காக்க பொதுமக்கள் திரண்டனர்!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் நச்சுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவருவதைக் கண்டித்தும், அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையிலான கடலூர் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

we-r-hiring

சொத்திக்குப்பம் முதல் நஞ்சலிங்கம் பேட்டை வரை கடற்கரையோரமாக இந்த அடையாள அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்களது வலுவான எதிர்ப்பை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு!

கடலூர் சிப்காட் விரிவாக்க எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைத்த இந்த அமைதிப் போராட்டத்தில், தியாகவல்லி ஊராட்சி, குடிகாடு ஊராட்சி, நொச்சிக்காடு, நந்தன் நகர், வள்ளலார் நகர், நடுத்திட்டு, அம்பேத்கர் நகர், பெரியார் நகர், லெனின் நகர், நஞ்சலிங்கம் பேட்டை, நாயக்கர் பேட்டை, தம்மனம்பேட்டை, சித்திரப்பேட்டை, திருச்சோபுரம், பெரியகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

“நாம் ஒன்றிணைவோம்… நிலம் காப்போம்… எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!”

சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் தங்களது நிலங்களின் எதிர்காலம் குறித்த கவலையை வெளிப்படுத்திய மக்கள், “நாம் ஒன்றிணைவோம்… நிலம் காப்போம்… நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மனித சங்கிலிப் போராட்டம், அப்பகுதி மக்களின் ஒற்றுமையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளது.

வீட்டு மனை பட்டா, அரசு வீடுகளில் 5% இடஒதுக்கீடு கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

MUST READ