Homeசெய்திகள்மாவட்டம்பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!– தஞ்சை பெரிய கோயில் எதிரே உள்ள உணவகத்துக்கு பெயர்...

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!– தஞ்சை பெரிய கோயில் எதிரே உள்ள உணவகத்துக்கு பெயர் பயன்படுத்தத் தடை!

-

- Advertisement -

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் எதிரே செயல்பட்டு வரும் சைவ உணவகம், பிரபல தனியார் உணவகத்தின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!– தஞ்சை பெரிய கோயில் எதிரே உள்ள உணவகத்துக்கு பெயர் பயன்படுத்தத் தடை!

“பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்ற ஔவையாரின் வாக்கையும், “பசி கண்ணைக் கட்டுது” என்ற தமிழ்ப் பழமொழியையும் சுட்டிக்காட்டி நீதிபதி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

வர்த்தக முத்திரை மீறல் வழக்கு

பிரபல உணவக நிறுவனமான சங்கீதா கேட்டரர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் எல்.எல்.பி. நிறுவனம், தங்களது உணவகத்தின் பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறி தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ‘ஹோட்டல் சங்கீதாஸ்’ (HOTEL SANGETHAS) உணவகத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வர்த்தக முத்திரை மீறல் வழக்குத் தொடர்ந்தது. தங்களது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்த அந்த உணவகத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, பசியுடன் உணவு தேடி வரும் வாடிக்கையாளர்கள், உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள பிரபல உணவகக் குழுமத்தைச் சேர்ந்த உணவகம்தான் இது என நம்பி ஏமாற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெயரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படலாம்

பசியுடன் இருக்கும் ஒருவர் உணவகத்தின் முழுமையான பெயரையோ, அதன் சின்னங்களையோ உன்னிப்பாகக் கவனிக்காமல் இருக்கலாம். உணவகத்தின் பெயரைப் பார்த்து ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என நீதிபதி தெரிவித்தார். இதனைச் சுட்டிக்காட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எதிரே உள்ள உணவகம், பிரபல தனியார் உணவகத்தின் பெயரான ‘சங்கீதா’ என்பதைப் பயன்படுத்தத் தடை விதித்தார்.

தமிழ்ப் பெயரிலும் ஒற்றுமை

உணவகத்தின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை நீக்கியிருந்தாலும், தமிழில் பிரபல உணவகத்தின் பெயரான ‘சங்கீதா’ என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆங்கிலப் பெயரைத் தமிழில் குறிப்பிடுவதற்கான இணையான சொல் அல்லது முறையே இல்லை என்று கூற முடியாது என்றும், உண்மையிலேயே வேறு பெயரைப் பயன்படுத்த விரும்பியிருந்தால், அதனைத் தமிழில் துல்லியமாக வேறுபடுத்திக் குறிப்பிட முடியும் என்றும் தெரிவித்தார்.

கிளைகள் இல்லாததால் குழப்பம் ஏற்படாது என்ற வாதம் நிராகரிப்பு

மனுதாரர் நிறுவனத்துக்குத் தஞ்சாவூரில் கிளைகள் எதுவும் இல்லை என்பதால், வாடிக்கையாளர்களிடையே குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற வாதமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை.

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் காண வரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள், உணவகத்தின் பெயரைப் பார்த்து ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, பிரபல உணவகத்தின் பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராகத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 நாட்களில் 450 கி.மீ. ஓடி கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம்பிடித்த ஒற்றைத் தாய்! மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நெகிழ்ச்சியான சாதனை!

MUST READ