Homeசெய்திகள்மாவட்டம்அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…

அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…

-

- Advertisement -

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற மாணவனின் சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.அப்பாவிற்கு இறுதி மரியாதை…கண்ணீருடன் தேர்வு எழுத சென்ற 10 வகுப்பு மாணவன்…

சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சரவணனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது மகன் இளமாறன் (15) சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

we-r-hiring

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சரவணன் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் துயரத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் சரவணனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி கொண்டு வரப்பட்டு மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற்றது. அந்த இறுதி சடங்குகளை மகன் இளமாறனே கண்ணீருடன் செய்தார். அப்போது அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இன்று இளமாறனுக்கு பத்தாம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு இருந்ததால், தந்தையின் இறுதி சடங்குகளை முடித்தவுடன் தாயை ஆறுதல் கூறி கண்ணீருடன் தேர்வு எழுத பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார். சமூக ஆர்வலர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று, தேர்வு நேரத்திற்கு முன்பாகவே பள்ளி வளாகத்தில் சேர்த்தனர்.

தந்தையை இழந்த துயரத்தையும் கடந்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு எழுத சென்ற இளமாறனின் மனவலிமை அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையிலிருந்து நேராக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்…

MUST READ