Homeசெய்திகள்மாவட்டம்மின் நிலைக்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லை: தமிழக பட்ஜெட் 2026-27 ஏமாற்றமளிக்கிறது - கோயம்புத்தூர்...

மின் நிலைக்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லை: தமிழக பட்ஜெட் 2026-27 ஏமாற்றமளிக்கிறது – கோயம்புத்தூர் சிறு, குறு தொழில்துறையினர் வேதனை

-

- Advertisement -

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகை மற்றும் ஒட்டுமொத்த தொழிற்துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், மின் நிலைக்கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிப்பதாகவும் கோவையைச் சேர்ந்த தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.மின் நிலைக்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லை: தமிழக பட்ஜெட் 2026-27 ஏமாற்றமளிக்கிறது - கோயம்புத்தூர் சிறு, குறு தொழில்துறையினர் வேதனை

மானிய பாக்கியே கோடிக்கணக்கில் உள்ளது – சுருளிவேல் (ரயில்வே உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம்)
பட்ஜெட் குறித்துப் பேசிய ரயில்வே உபகரண உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுருளிவேல் கூறுகையில், “நடப்பு நிதிநிலை அறிக்கையில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான முதலீட்டு மானியமாக ரூ.358 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டிலேயே கோவையில் மட்டும் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு மானிய பாக்கி வழங்க வேண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களையும் கணக்கிட்டால், இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது. ஒட்டுமொத்த தொழிற்துறைக்கே ரூ.2,140 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது தொழில் வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது.

we-r-hiring

மேலும், தொழில்களுக்கான மின்கட்டணத்தில் ‘நிலைக்கட்டணத்தை’ குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வாரம் முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தோம்; அவரும் பரிசீலிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் நிலைக்கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது” என்றார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சிறு தொழில்களுக்கு எனத் தனி தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்ட சிப்காட் வளாகங்களில் குறு மற்றும் சிறு தொழில்களுக்குச் சலுகை விலையில் மனைகள் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மின் நிலைக்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லை: தமிழக பட்ஜெட் 2026-27 ஏமாற்றமளிக்கிறது - கோயம்புத்தூர் சிறு, குறு தொழில்துறையினர் வேதனை

கிலோவாட்டிற்கு ரூ.170-ஆக உயர்ந்த நிலைக்கட்டணம் – ஜேம்ஸ் (டேக்ட் தலைவர்)
இது குறித்துப் பேசிய டேக்ட் (DACT) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “கடந்த காலங்களில் கிலோவாட்டிற்கு ரூ.35 ஆக இருந்த நிலைக்கட்டணம் தற்போது ரூ.170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் மாதாந்திர வாடகையாக அதிகத் தொகையைச் செலுத்த வேண்டி உள்ளது. இதனைத் திரும்பப் பெற வலியுறுத்தி 8 கட்டப் போராட்டங்களை நடத்தியும், பட்ஜெட்டில் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

சிப்காட் அமைப்பது பெருந்தொழில்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றாலும், எங்களைப் போன்ற குறுந்தொழில் முனைவோருக்குத் தனியாக குறுந்தொழில் பேட்டைகள் அமைக்கத் தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளதால், அரசு மூலப்பொருட்க்கான வங்கியைப் புனரமைத்து நியாயமான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மின்சாரத் துறையின் கட்டமைப்பு மேம்பாட்டையும் MSME நிதி ஒதுக்கீட்டையும் வரவேற்றாலும், குறுந்தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கையான மின் நிலைக்கட்டணத்தைக் குறைக்க அரசு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

“டெல்டாவை வறட்சியில் தள்ளும் முதலமைச்சர் விஜய்யின் சமாதான அரசியல்!” – கொதித்தெழும் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்புப் பேட்டி

MUST READ