Homeசெய்திகள்மாவட்டம்ஆற்றில் கவிழும் அபாயத்தில் வாகனங்கள்.. கடலூர் செம்மங்குப்பம் பாலத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை!

ஆற்றில் கவிழும் அபாயத்தில் வாகனங்கள்.. கடலூர் செம்மங்குப்பம் பாலத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை!

-

- Advertisement -

கடலூர் அடுத்த செம்மங்குப்பம் மற்றும் நொச்சிக்காடு கிராமங்களை இணைக்கும் உப்பனாற்றுப் பாலத்தில் போதிய பாதுகாப்புத் தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புக்கட்டைகள் அல்லது வலுவான இரும்புத் தடுப்புகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆற்றில் கவிழும் அபாயத்தில் வாகனங்கள்.. கடலூர் செம்மங்குப்பம் பாலத்தில் கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைக்க கோரிக்கை!

பல கிராமங்களை இணைக்கும் முக்கியப் பாலம்
கடலூர் மாவட்ட கடற்கரையோரப் பகுதியான நொச்சிக்காடு, செம்மங்குப்பம், தியாகவல்லி, நடுத்திட்டு, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கடலூர் மாநகருக்கு எளிதில் சென்று வர உப்பனாற்றின் குறுக்கே ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் இப்பாலம் கடந்த 2010-2011ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் மிக முக்கியப் பாலமாக இது திகழ்கிறது.

we-r-hiring

விபத்து அபாயமும் பாதுகாப்பற்ற சூழலும்
முன்பு ஏற்பட்ட விபத்துகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தற்போது இப்பாலத்தின் சில பகுதிகளில் இருந்த பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்து முற்றிலுமாக உடைந்துள்ளன. காவல்துறையினர் தரப்பில் தற்காலிகமாக சில இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தாலும், அது நிரந்தரத் தீர்வாக அமையவில்லை.

குறிப்பாக இரவு நேரங்களில் இப்பாலத்தைக் கடக்கும் போது போதிய வெளிச்சமின்மை மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்வோர்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மழைக்காலங்கள் நெருங்கி வரும் தற்போதைய சூழலில், விபத்துகளைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் உடனடியாகத் தலையிட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். உடைந்த தடுப்புச் சுவர்களைச் சீரமைப்பதோடு, பாலத்தின் இருபுறமும் உறுதியான கான்கிரீட் தடுப்புக்கட்டைகளை அமைக்க வேண்டும் எனவும், பழுதாகி உள்ள மின் விளக்குகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம்! நாகப்பட்டினத்தில் கலெக்டர் பிரவீன்குமார் தொடங்கி வைத்தார்!

MUST READ