சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி, ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகத் தொடர்கிறது.
இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:
கடந்த 2 ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
விசிக நேரில் ஆதரவு:
போராட்டம் 4வது நாளாக நீடித்து வரும் நிலையில், போராட்டப் பந்தலுக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில்:
விசிக மண்டல செயலாளர் செல்லப்பன்
மாவட்ட செயலாளர் தமிழ்வளவன்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை செயலாளர் அறவாழி
உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகளிடம் உரையாற்றினர்.
மேலும், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற விசிக சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிர்ச்சி: முதல்வர் மருந்தக பெண் ஊழியருக்கு கத்திகுத்து!
