Homeசெய்திகள்மாவட்டம்வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க...

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தர்பூசணிப் பழங்கள், போதிய விற்பனை வாய்ப்பு இல்லாததால் விவசாய நிலத்திலேயே காய்ந்தும் அழுகியும் வீணாகி வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். விளைச்சல் அமோகம்… ஆனால் வியாபாரிகள் வரவில்லை!

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

we-r-hiring

வந்தவாசியை அடுத்த மருதாடு, சூரியகுப்பம், சாலவேடு, கீழ்க்கொடுங்காலூர், சூரியதாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். விவசாயிகள் எதிர்பார்த்தபடியே இந்த ஆண்டு தர்பூசணி விளைச்சல் மிகவும் சிறப்பாக அமைந்து, தோட்டம் முழுவதும் பழங்கள் அதிக அளவில் காய்த்துக் குலுங்கின.ஆனால், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கிருந்து தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த பழங்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

நிலத்திலேயே வெடித்துச் சிதறும் பழங்கள்: ஏக்கருக்கு 5 லட்சம் நஷ்டம், அறுவடை செய்யப்படாமல் தோாட்டத்திலேயே கிடப்பதால், பல டன் தர்பூசணி பழங்கள் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து, கருகி, நிலத்திலேயே வெடித்து அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வந்தவாசியில் 200 ஏக்கரில் வீணாகும் தர்பூசணி: நிலத்திலேயே காய்ந்து அழுகும் சோகம் – நிவாரணம் வழங்க விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை!

தமிழக அரசுக்குக் கண்ணீர் மல்க கோரிக்கை, பயிர் செய்ய வாங்கிய கடனைக் கூட அடைக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறும் அப்பகுதி விவசாயிகள், இக்கட்டான இந்தச் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிப் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி பேட்டி:“நாங்க எதிர்பார்த்த மாதிரியே இந்த தடவை தர்பூசணி நல்லா விளைஞ்சிருந்தது. ஆனா, பக்கத்து மாநிலங்கள்ல மழை பெய்யறதால வியாபாரிங்க யாரும் பழம் எடுக்க வரல. அறுவடை பண்ண முடியாம தோாட்டத்துலேயே பழங்கள் எல்லாம் காய்ஞ்சு அழுகி போச்சு. ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வரைக்கும் நஷ்டம் ஆயிடுச்சு… அரசாங்கம் தான் எங்கள பாத்து உரிய நிவாரணம் கொடுத்து காப்பாத்தணும்.”

என்னப்பா இது.. ரூ.758 கோடி டூ ரூ.1,035 கோடி! சூயஸ் ஒப்பந்தத்தில் நடந்த பகற்கொள்ளை? அதிரும் சேலம் மாநகரம்!

MUST READ