Homeசெய்திகள்மாவட்டம்"ஒரு மாத்திரைக்கு 2 மணி நேரக் காத்திருப்பு!": புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தவிப்பு!

“ஒரு மாத்திரைக்கு 2 மணி நேரக் காத்திருப்பு!”: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தவிப்பு!

-

- Advertisement -

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்குப் போதிய பணியாளர்கள் இல்லாததால், தினமும் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று மாத்திரைகளைப் பெற வேண்டிய அவல நிலை நீடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்."ஒரு மாத்திரைக்கு 2 மணி நேரக் காத்திருப்பு!": புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தவிப்பு!மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையாக விளங்கும் இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட காத்திருப்பு!
மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மருந்து சீட்டைக் கையில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. “நான் காலையில 8.30 மணிக்கு வந்தேன்… ஒரு மாத்திரை வாங்குறதுக்கு ரெண்டு மணி நேரமா வரிசையில நிக்கிறேன்” என அங்கு வந்த நோயாளி ஒருவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலிலும், உடல் உபாதைகளுடனும் மணி கணக்கில் காத்து நிற்பதால் பல நோயாளிகள் மயக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்."ஒரு மாத்திரைக்கு 2 மணி நேரக் காத்திருப்பு!": புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் தவிப்பு!போதிய ஊழியர்கள் இல்லாததே காரணம்
மருத்துவமனையில் உள்ள மருந்தகப் பிரிவில் (Pharmacy Counters) நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவுக்கு ஊழியர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் (Pharmacists) நியமிக்கப்படவில்லை என்பதே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு சில கவுண்டர்கள் மட்டுமே செயல்படுவதால் இந்த அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.

we-r-hiring

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கூடுதல் மருந்தகக் கவுண்டர்களைத் திறக்கவும், உடனடியாகப் போதிய பணியாளர்களை நியமிக்கவும் சுகாதாரத் துறை மற்றும் தமிழக அரசு (CMOTamilnadu) விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம கம கறி விருந்து!

MUST READ