Homeசெய்திகள்மாவட்டம்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது – மத்திய சுகாதார அமைச்சகம்

-

- Advertisement -

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்துவிட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். 2021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவமனையாக எய்ம்ஸ் மருத்துவமனை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் காலதாமதம், குறித்தும் எப்போது இத்திட்டம் முடிக்கப்படும்? என எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ், பிரதான் மந்திரி ஸ்வஸ்தைய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 2021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கு இதுவரை மத்திய சுகாதார அமைச்சகம் 471.02 கோடி ரூபாயை விடுவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 47% நிறைவடைந்து விட்டதாகவும், திட்டம் நிறைவடையும் என ஏற்கனவே மதிப்பிடப்பட்ட காலம் 2026 அக்டோபர் மாதம் என தெரிவித்துள்ளார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட பணிகள் சமூகமாக நிறைவடைவதை ஆய்வு செய்வதற்காக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

SIR பணிகளில் ஈடுபட்ட பிஎல்ஓக்களுக்கு  ஊதிய உயர்வு – ரூ.99 கோடி ஒதுக்கீடு…

MUST READ