Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு - இழப்பீடாக...

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக, விவசாய நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வளர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் காவல்துறை பாதுகாப்போடு அதிரடியாக வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு - இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!பத்து வருட உழைப்பு நொடியில் காலி!
வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி உள்ளிட்டோரின் சொந்த நிலத்தில், கடந்த 10 ஆண்டுகளாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்பகுதியில் உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணிகளுக்காகத் துறைசார்ந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் திடீரென அந்த நிலத்திற்குள் நுழைந்துள்ளனர். நில உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி, காவல்துறை பாதுகாப்போடு அங்கே பல ஆண்டுகளாக வளர்ந்து நின்ற 85-க்கும் மேற்பட்ட மரங்களை அதிகாரிகள் வெட்டிச் சாய்த்துள்ளனர்.

we-r-hiring

லட்சக்கணக்கில் மதிப்பு; ரூ.97 ஆயிரம் மட்டுமா இழப்பீடு?
பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வளர்த்த மரங்கள் கண்மூடித்தனமாக வெட்டி அகற்றப்பட்டதால் தங்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், இவ்வளவு பெரிய இழப்புக்கு வெறும் 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாக வழங்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் கண்ணீர்மல்கக் குரல் எழுப்பியுள்ளனர்.கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு - இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!அரசுக்கு நிலம் தந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்!
பாதிக்கப்பட்ட செல்வியின் குடும்பத்தினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளி கட்டடம் கட்டுவதற்காகத் தங்களுக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை அரசிடமே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தானமாக வழங்கியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தாராளமாகத் தன் நிலத்தை அரசுக்கு வழங்கிய அதே குடும்பத்திற்கு, இன்று அவர்களின் வாழ்வாதாரமான மரங்கள் காவல்துறையைக் கொண்டு அழிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சூறையாடிய இந்தச் சம்பவத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் பெட்டியில் ஏற சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தின் நீளம் அதிகரிக்கப்படுமா?

MUST READ