கோடை காலம் தொடங்கிவிட்டாலே மதுரை மாவட்டத்தின் அனல் காற்று நகரின் உஷ்ணத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) பதிவான வெப்பநிலையானது கடந்த பல ஆண்டுகளின் சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. மதுரையின் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகரித்து, வெப்பத்தின் அளவு 111 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி கொளுத்தி வருகிறது.


இந்தத் கோடை வெயிலின் கோரத் தாண்டவத்தால், மதுரையின் பிரதான நீர்நிலைகள் வண்டு, கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து இப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குடிநீருக்கே மக்கள் திண்டாட வேண்டிய பரிதாப நிலைக்கு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் தள்ளப்பட்டுள்ளன.
வானம் பொய்த்து, பூமி வறண்டு கிடப்பதால் தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு வகைகளில் இறைவனைப் பிரார்த்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகரின் அடையாளமாகவும், ஆன்மீகப் பெருமைமிக்கதாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில், மழை வேண்டி இஸ்லாமியப் பெருமக்கள் பெருந்திரளாக ஒன்று திரண்டு சிறப்புத் தொழுகையும், ஏக இறைவனிடம் தீவிர பிரார்த்தனையும் மேற்கொண்டனர்.
தர்கா வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, வறட்சி நீங்கி நல்ல மழை பெய்யவும், மக்களின் துயரங்கள் அகலவும் உருக்கமுடன் துஆ (பிரார்த்தனை) செய்தனர். அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இயற்கை அன்னையின் அருள் வேண்டி நடத்தும் இத்தகைய கூட்டுப் பிரார்த்தனைகள், மதுரையின் மத நல்லிணக்கத்திற்கும் ஆன்மீக ஒற்றுமைக்கும் மற்றுமொரு சான்றாகத் திகழ்கிறது.
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!
