செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல கண்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இங்கு 24 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இன்று காலை இப்பள்ளியில் உள்ள 11 மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட்டு இருந்தன. வழக்கம்போல் காலை உணவு திட்டம் பணி முடிந்து பாத்திரங்களை சுத்தம் செய்ய போது உணவில் பல்லியிருப்பதை கண்டுள்ளனர்.
உடனே ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிட்ட 11 குழந்தைகளை ஜமீன் எண்டத்தூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து வந்து 2 ஆண் 9, பெண் பிள்ளை 11 குழந்தைகளையும் ஆம்புலன்ஸ் வாகன மூலம் அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்து பரிசோதனை செய்தனர்.

அனைத்து குழந்தைகளும் இதுவரை நல்ல முறையில் உள்ளனர். இவர்களை இரண்டு மணி நேரம் மருத்துவ மனைவியை தங்கி முழு பரிசோதனை செய்யப்பட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பப்படும் என மருத்துவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு ரூ.5,000 விநியோகம் – தவெக மீது பகிரங்கப் புகார்.
