Homeசெய்திகள்மாவட்டம்ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

-

- Advertisement -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 72 ஆண்டுகளாகப் பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலங்களுக்கு உரிமை கோரி போராடி வரும் கிராம மக்கள், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைகிணறு, மத்ரூட் மற்றும் கார்கூடல்பட்டி ஊராட்சிகளில் உள்ள 14 கிராமங்களில் (ராமநாதபுரம், காரைக்கால், இந்திரா நகர், பாரதி நகர், சிவா நகர், அண்ணா நகர் உள்ளிட்டவை) சுமார் 1,200 குடும்பத்தினர் வசித்துக்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 1954-ஆம் ஆண்டில், தமிழ்நாடு வனச் சட்டம் 1882 பிரிவு 4-ன் கீழ் இப்பகுதியை காப்பு வனமாக மாற்ற அரசு அறிவிப்பு வெளியிட்டதாகவும், ஆனால் இறுதி அறிவிப்பு வெளியிடப்படாமல் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே 1,000 விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குப் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அப்பகுதி மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன.

we-r-hiring

தலைமைச் செயலக முற்றுகை அறிவிப்பும், பேச்சுவார்த்தையும்
தொடர் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பிவிட்டு, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் இன்று நாரைகிணறு கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

அமைச்சர் முன்னிலையில் காரசார வாக்குவாதம்
பேச்சுவார்த்தையின்போது, “சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நாங்கள் இங்குதான் வாழ்ந்து வருகிறோம். 1954-ஆம் ஆண்டு அரசிதழ் அறிவிப்பைக் காட்டி எங்களை மாஞ்சோலை চা தோட்டத் தொழிலாளர்களைப் போல வெளியேற்றுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுகின்றனர்” என்று விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்தனர். மேலும், உடனடியாகத் தங்களுக்குப் பட்டா வழங்கி அடிப்படை உரிமைகளை மீட்டுத் தடாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் ஆவேசமாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரின் சமாதானம்
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், “இது எளிதில் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தகுந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறுவது வேதனை அளிக்கிறது; உங்களுக்காகப் போராடவே நான் இருக்கிறேன்” என்று கூறி மக்களைச் சமாதானப்படுத்தினார். பின்னர், மக்கள் தரப்பிலிருந்து 6 பேர் கொண்ட குழுவினரையும், அதிகாரிகளையும் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய வழிமுறைகள் கண்டறியப்படும் என்று உறுதியளித்துவிட்டு அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

புத்தகத்தில் படித்ததை நிஜத்தில் பார்த்த சிலிர்ப்பு! – டெல்லிக்கு விமானத்தில் பறந்த மதுரை அரசுப் பள்ளி மாணவர்கள்!

MUST READ