என்னுடைய கன்னி பேச்சு எவ்வாறு இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் என மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளாா்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நாளை டெல்லியில் பதவியேற்க உள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன்.
இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை மற்றும் கடமையையும் நான் செய்ய உள்ளேன். பெருமையோடு தான் சொல்லிக் கொள்கிறேன். எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது. சில விஷயங்கள் இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவது போல இங்கு பேசக்கூடாது. எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
மருத்துவர் திரு.நம்பெருமாள் சாமி மறைவிற்கு T T V தினகரன் இரங்கல்…
