spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஎடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது - டிடிவி தினகரன் ஆவேசம்

எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்

-

- Advertisement -

முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது - டிடிவி தினகரன் ஆவேசம்சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது; எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது. எப்படியாவது கட்சி தன்னிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறார். டெல்லி நிர்பந்தத்திற்கு அடிபணிந்தே அதிமுகவில் இருந்து எடப்பாடி தன்னை நீக்கியதாக அவர் கூறினார். நிரந்தர பொதுச்செயலாளராக அவரே இருக்கும் வகையில் அதிமுகவின் அடிப்படை விதிகளை எடப்பாடி மாற்றிவிட்டார்.

அதிமுகவினர் இன்னும் விழிக்காவிட்டால் 2026 தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும். 2021யை விட 2026 தேர்தலில் மோசமான தோல்வியை அதிமுக சந்திக்க நேரிடும். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் குறித்த சீமானின் அருவறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது உங்களுக்கும் சொந்தமானது…. நடிகர் விக்ரம் பிரபு வெளியிட்ட அறிக்கை!

we-r-hiring

MUST READ