சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னர்கள் மாயமாகி உள்ளதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கு வந்த 20 கோடி மதிப்பிலான 82 கண்டைனர் திருட்டு என்றும் 8 கண்டைனர் மாயம் என்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஆங்காங்கு நிறுவனத்தின் தமிழ்நாட்டின் CEO சுப்பிரமணியன் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, ஆங்காங் நாட்டில் உள்ள தனியார் நிறுவனமான M/S COSMOSS VU LIMITED என்ற தனியார் நிறுவனம் மூலம் சீனாவில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கடந்த மாதம் 90 கண்டைனரில் PVC ரெசின் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட கண்டைனரில் 82 கண்டைனர் திருடப்பட்டுள்ளதாகவும், 8 கண்டைனர் ஆதாரமே இல்லாமல் மாயமாகி உள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். ஆவடி காவல் ஆணையரத்தில் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் போலி ஆவணங்களை காட்டி 82 கண்டைனரை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. கண்டைனரை அபகரித்த தனியார் ப்ளாஸ்டிக் நிறுவனம், ஷிப்பிங் கம்பனி, என 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(1) SWAROOP JAYANTILAL BAGRECHA PARTER M/S.RISHAB TRIEXIM LLP
(2) UPASANA SWAROOP BAGRECHA, PARTNER M/S. RISHAB TRIEXIM LLP
(3)PRAVEEN JAYANTILAL BAGRECHA PROPERITOR M/S. KANCHAN POLYMERS
(4)INDRAJIT SENGUPTA DIRECTOR M/S. MSC AGENCY INDIA PRIVATE LIMITED (MSC)
(5) IBRAHIM S MOHAMMED HUSSAIN SHARAF ALHASHMI, DIRECTOR M/S. MSC AGENCY INDIA PRIVATE LIMITED (MSC)
(6) DIPAKKUMAR MANHARLAL MEHTA, DIRECTOR M/S. MSC AGENCY INDIA PRIVATE LIMITED (MSC)
(7)DEEPAK KRISHNAN TEWARI DIRECTOR M/S. MSC AGENCY INDIA PRIVATE LIMITED (MSC)
(8) PRASAD VINAYAK BAPAT, DIRECTOR, M/S. WAN HAI LINES (INDIA) PRIVATE LIMITED(WAN)
(9)FUR LUNG HSIEH, DIRECTOR, M/S. WAN HAI LINES (INDIA) PRIVATE LIMITED (WAN)
(11)JEYASEELAN A S GENERAL MANAGER M/S. WAN HAI LINES (INDIA) PRIVATE LIMITED (WAN)
(10) JIUB MING LEE, DIRECTOR, M/S. WAN HAI LINES (INDIA) PRIVATE LIMITED (WAN)
(12) BALAJIN DEPUTY GENERAL MANAGER M/S. WAN HAI LINES (INDIA) PRIVATE LIMITED (WAN)
(13)CHEN TEH SHENG, DIRECTOR M/S. T.S LINES (INDIA) PRIVATE LIMITED (TS LINES)
(14)CHEN SHAO HSIANG, DIRECTOR M/S. T.S LINES (INDIA) PRIVATE LIMITED (TS LINES)
(15)PANKAJ MEHROTRA DIRECTOR M/S. T.S LINES (INDIA) PRIVATE LIMITED (TS LINES)
(16)MUKESH MAHENDRA PRASAN OZA, DIRECTOR M/S. T.S LINES (INDIA) PRIVATE LIMITED (TS LINES)
(17)DHAYANANDHAN MR SENIOR GENERAL MANAGER M/S. T.S LINES (INDIA) PRIVATE LIMITED (TS LINES)
(18)SESHADRI RAJAPPAN DIRECTOR M/S. SICAL MULTIMODAL AND RAIL TRANSPORT LIMITED (SICAL)
(19) KALIAMURTHY RAJAVEL, DIRECTOR M/S. SICAL MULTIMODAL AND RAIL TRANSPORT LIMITED (SICAL)
(20)MOHAN KUMAR, CHIEF EXECUTIVE OFFICER M/S. SICAL MULTIMODAL AND RAIL TRANSPORT LIMITED (SICAL)
(21)SUDARSAN, MANAGER M/S. SICAL MULTIMODAL AND RAIL TRANSPORT LIMITED (SICAL) ஆகிய 21 பேர் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் தெரிவித்த ஆங்காங் நிறுவனம் பலமுறை சென்னையை சேர்ந்த ரிஷாப் டெரிசிம் நிறுவனத்திற்கு சரக்குகளை இறக்குமதி செய்து வந்துள்ளது. இந்த முறை போலி ஆவணங்கள் மூலம் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியாமல் 82 கண்டனைர்களை டிலவரி செய்ததைப் போல் போலி ஆவணங்களை காட்டிவிட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வித ஆவணங்களும் இல்லாமல் மாயமாகிப்போன 8 கண்டைனர்களையும் எங்கேப் போனது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட 82 கண்டைனர்கள், மாயமான 8 கண்டைனர்கள் என்று அதன் மதிப்பு சுமார் 20 கோடி இருக்கலாம் என்று போலீசார் தோராயமான மதிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் உண்மையான மதிப்போ ஒரு கண்டைனரில் 10 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருக்கலாம் என்றும் 90 கண்டைனரிலும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு குறையாமல் சரக்கு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரிலீஸ் எப்போது?