spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

-

- Advertisement -

காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

actor robo shankar raised parrot at home seized

we-r-hiring

சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார். கடந்த வாரம் ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கையில் இருந்த நிலையில் , ரோபோ சங்கரின் அண்ணன் மகள் மற்றும் வீட்டில் பணிப்புரிந்து வரும் ஊழியர்கள் இருந்துள்ளனர். அப்போது திடிரென அவரது வீட்டில் நுழைந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த 2 கிளி அலெக்சாண்டரியன் பச்சைக்கிளிகளை மீட்டனர். கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ரோபோ சங்கரின் மனைவியின் தோழி ஒருவர் பணி மாறுதல் காரணமாக வேறு ஊருக்கு செல்வதால் வீட்டில் வளர்த்த கிளியை எங்களை வளர்க்கச்சொல்லி பரிசாக கொடுத்ததாகவும், இரு கிளிகளுக்கும் ‘பிகில்- ஏஞ்சல்’ என பெயர் வைத்ததாகவும், இந்த வகைக் கிளிகளை வளர்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை இருந்த நிலையில் பரிசாக கிடைத்ததால் வளர்த்தாகவும் ரோபோ சங்கர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

MUST READ