Homeசெய்திகள்சென்னைதேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

-

- Advertisement -

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு பதிவு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு,  பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட உள்ளன.சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்புஅண்ணா பல்கலைக்கழகம்  வாக்கு எண்ணும் மையத்தில்
​மைலாப்பூர்,
​சைதாப்பேட்டை,
​தி.நகர்,
​வேளச்சேரி,
​​விருகம்பாக்கம்  ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களும்,

லயோலா கல்லூரிவாக்கு எண்ணும் மையத்தில்
​அண்ணா நகர்,
​ஆயிரம் விளக்கு,
​​எழும்பூர்,
​வில்லிவாக்கம்,
கொளத்தூர்,
பெரம்பூர் ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும்,

we-r-hiring

ராணி மேரி கல்லூரிவாக்கு எண்ணப்படும் மையத்தில்

​டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்,
​​திரு.வி.க. நகர்,
​ராயபுரம்,
துறைமுகம்,
சேப்பாக்கம்,
திருவல்லிக்கேணி ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்படும்.

முதல் அடுக்கான மத்திய துணை ராணுவ படை, இரண்டாம் அடுக்கான தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் படை, மூன்றாவது அடுக்கான ஆயுதப்படை, நான்காவது அடுக்கான சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திற்கும், 4 அடுக்கு பாதுகாப்பில் 500 வீரர்கள் பாதுகாப்பு சுழற்சி போடப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் (ஷிஃப்ட் ஒன்றுக்கு) மத்திய துணை ராணுவ படையினர் 30 வீரர்கள், அதன்பிறகு ஒரு உதவி ஆணையர் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் படையைச் சேர்ந்த 15 வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் 40 பேர், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் 50, இது தவிர சோதனை அதிகாரிகள் என மொத்தம் 500 வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் இரண்டு  நிலைய அலுவலர்கள் தலைமையில் 15 தீயணைப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு  தீயணைப்பு வண்டிகள், 10 fire extinguisher (கையடக்க தீயணைப்பு கருவி) கருவிகள், மணல் நிரப்பப்பட்ட வாளிகள் தயார் நிலையில், தீயணைப்பு வீரர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரியில் 188 கண்காணிப்பு கேமராக்கள்(CCTV) பொருத்தப்பட்டு, ஒரு மினி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராணி மேரி 172 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 சிசிடிவி அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மினி கட்டுப்பாட்டு  அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் அங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த கட்டுப்பாட்டறை பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்சி முகவர்களும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

MUST READ