Homeசெய்திகள்சென்னைரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- மன்னிப்புக்கோரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- மன்னிப்புக்கோரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

-

- Advertisement -

ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி- மன்னிப்புக்கோரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

Fans at AR Rahman concert in Chennai on Sunday were left disappointed with the management.

சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விற்கப்பட்டதால் நிற்கக்கூட இடமில்லாமல் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில்,  ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரால் பங்கேற்கமுடியாமல் போனது. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது பற்றி வலைதளங்களில் பலர் ஆதங்கம் தெரிவித்த நிலையில் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. திட்டமிட்டதைவிட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாகவும் ஏசிடிசி நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானின் கான்சர்ட் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும், நிகழ்ச்சிக்கான தகுந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் செய்யவில்லை என்றும் தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம், நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தாம்பரம் ஆணையரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ