எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 பேர் பங்கேற்ற சைக்கிள் பேரணி
பாலியல் ரீதியான பிரச்சனையில் விளையாட்டு வீராங்கனைகள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. பெண்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலை வந்து விட்டால் பாலியல் கொடுமையை ஒழித்து விடலாம் என கிக் பாக்ஸிங் வீராங்கனை சுப்ரஜா பேட்டி அளித்தார்.
சென்னை மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்திய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மணலி சிபிசில் தொழில் நுட்ப கல்லூரியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் Dr. C.சுரேஷ் பாபு (International Referee and Judge 0f WAKO), V.S.சுப்ரஜா (International Kick boxer), லாவண்யா (Actor), ஆனந்த் செல்வன் (Actor) உள்ளிட்டோர் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினர்.
சக்ஷம் சைக்கிள் தினம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் இந்தியாவில் நிலக்கரி பெட்ரோலியம் போன்ற புதுப்பிக்கப்பபட முடியாத எரிசக்தி அளித்து வரும் சுரங்கங்கள் தற்போது குறைந்துவிட்டதால் ஒட்டுமொத்த உலகமும் இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
தற்போது நம்மிடம் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும், இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அளவோடு பயன்படுத்தி எரிபொருளை சேமிக்க வேண்டும். சுற்றுச்சுழல் பாதுகாக்க படவேண்டும் என்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வில் வருங்கால இளைஞர்களின் உடல் வலிமையை பாதுகாக்கவும் சைக்கிள் ஓட்டுவதினால் ஏற்படும் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எரிவாயு சேவை நலன் குறித்து பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
சிபிசில் தொழில்நுட்ப கல்லூரியில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கல்லூரியில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கிக் பாக்சிங் வீராங்கனை சுப்புராஜா சிபிசிஎல் நிறுவனம் மூலம் நடைபெற்ற சைக்கிள் தினத்தில் தானும் கலந்து கொண்டு, ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றது மகிழ்ச்சி ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், சைக்கிள் ஓட்டுவதினால் உடல் முழுவதும் உடற்பயிற்சி செய்தது போல் உள்ளது என்று தெரிவித்தார். சைக்கிள் ஓட்டுவதினால் உடலின் ஒரு ஒரு பாகம் என தனித்தனியாக இல்லாமல் உடல் முழுவதுமே பலனளிப்பதாக கூறினார்.
நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது மிகச் சிறந்தது என்றும் தெரிவித்தார். விளையாட்டு என்பது சிறுவயதிலே குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அதில் சைக்கிள் ஓட்டுவது மகிழ்ச்சியான உடற்பயிற்சியாகும் என தெரிவித்தார்.
சிராய்ட் போன்று ஊக்க மருந்தில்லாமல் உடற்பயிற்சி செய்தாலே உடல் வலிமை பெறும் என்று கூறினார். நானும் ஒரு கிக் பாக்ஸர் தான் பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் தன்னைப் பாதுகாக்கும் தற்காப்பு கலையை கற்றுள்ளேன்.
விளையாட்டு வீராங்கனைகள் என்றாலே பலம் வாய்ந்து தான் இருப்பார்கள் இருந்தாலும் தங்களைக் காத்துக் கொள்ள தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
நாம் என்ன கட்டுப்பாடோடு இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. பெண்கள் அனைவரும் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் மற்ற விளையாட்டு வீராங்கனைகள் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது.
என்னதான் போராடினாலும் அது தடுக்கும் வழிகள் இல்லை கொஞ்சம் கொஞ்சமாக பெண்களும் தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலை வந்து விட்டால் பாலியல் கொடுமையை ஒழித்து விடலாம் என கிக் பாக்ஸிங் வீராங்கனை சுப்ரஜா தெரிவித்தார்.