இராணுவ வீரர் உயிரிழப்பு விவகாரம், தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய பேரணி சென்னையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர் பிரபு உயிரிழப்பு சம்பவம்,பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இல்லம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் பங்கேற்றனர். பொதிகை அலுவலகம் வரை சுமார் 500 மீட்டர் பேரணி நடைபெற்றது. பேரணியின்போது போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இறுதியாக ராணுவ வீரரின் புகைப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அஞ்சலியை செலுத்தினர்.
இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3 ஆயிரத்து 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
