மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெருமழை காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாருவது, புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள நீர் நிலைகளை தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மைதானங்கள், மற்றும் மற்றும் பூங்காக்கள் மற்றும் தெருக்களில் மழைநீர் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னை பெருநகரில் பருவமழையின் போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிதியுதவியின் கீழ் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் சென்னை மாநகராட்சி இத்திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 8 விளையாட்டு மைதானங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டு திடல்களிலும் தலா, 1.6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 5 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் மழைநீர் உள்வாங்காதா இடங்கள் என மொத்தம் 770 இடங்களில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் குடியிருப்புகளில் பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பையும் தடுக்க முடியும். இந்த கட்டமைப்பு, 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீரை சேகரித்து வைக்கும். இவற்றால் நீலத்தடி நீர் உயர்வதுடன், மழைநீர் வீணாக கடலில் கலப்பதும் தடுக்கப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் அருகாமையில் குடியிருப்புகளில் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கடந்த ஆண்டு கோவையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்