Homeசெய்திகள்சென்னைசென்னை மெட்ரோ நிறுவனம்…10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!

சென்னை மெட்ரோ நிறுவனம்…10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!

-

- Advertisement -

மெட்ரோவில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ நிறுவனம்… 10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கு 10% தள்ளுபடி கட்டணத்துடன் காகித பயணச்சீட்டாக வழங்கப்பட்டு வந்த குழு பயணச்சீட்டு பெறும் வசதி 1.3.2025 முதல் திரும்பப் பெறப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை மெட்ரோ நிறுவனம்…10% தள்ளுபடி குழு பயணச்சீட்டு பெறும் வசதி நிறுத்தம்!டிஜிட்டல் பயணச்சீட்டுக்கு மாறுவதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம்.

MUST READ