Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…

-

- Advertisement -

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, மாலையில் ரூ.2,560 குறைந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி மாலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அன்றைய தினம் மாலையில் பவுனுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கு விற்னையானது. தொடர்ந்து நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது.

we-r-hiring

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,800க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,670க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09,360க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.260க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை திடீரென அதிரடியாக குறைந்தது. அதாவது, நேற்று மாலை கிராமுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350க்கும், பவுனுக்கு ரூ.2,560 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,800க்கும் விற்றது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.

இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சரசரவென குறைந்தது…நகைப்பிரியர்கள் குஷி…

MUST READ