spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு- சென்னையில் வெடித்த போராட்டம்

-

- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கின்ற ஜெயின் சமூகத்தின் புனித தளம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Jains protest Jharkhand govt move on 'sacred' Shikharji - The Sunday  Guardian Live

we-r-hiring

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஜெயின் சமூக மக்களின்
” ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் ” என்னும் ஜைனரது புனிதமிகு ஆலயத்தைச் சுற்றூலாத் தலமாக மாற்றும் ஜார்கண்ட் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெயின் சமூக மக்கள் 25,000 மேற்பட்டோர் கலந்து கொண்டு மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் பல்வேறு மாநிலங்களில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து, குஜராத் கிர்ணர், பாலிதானா புனித தளங்களையும் சுற்றுலா தலமாக மாற்ற அரசு அறிவித்துள்ளது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் மக்கள் பேரணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஷிகர்ஜி புனித தலம் 5000 ஆண்டுகளாக புனித தலமாக விளங்குகிறது. 27 தீர்த்தங்கரர்களில் 24 பேர் மோட்சம் பெற்ற இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்தி வந்தனர். அதனை சுற்றுலா தலமாக மாற்ற ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கு மத்திய அரசு நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளது. இருப்பினும், முன்பே அறிவித்த போராட்டம் என்பதாலும், இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் எந்த அரசும் ஈடுபடக்கூடாது என்பதற்காக இந்த பேரணி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பேரணியில் ஈடுபட்டோர் கூறுகையில், “எங்களுடைய புனித தலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதனை அந்த ஜார்கண்ட் மாநில அரசு சுற்றுலாத்தலமாக மாற்ற அரசாணை பிறப்பித்து இருந்தது. 27 தீர்த்தங்கரர்கள் எங்க மதத்தில் உள்ளனர். அதில் 24 பேர் எங்களுடைய புனித தனமான சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம் மோட்சம் பெற்று உள்ளனர். இந்துக்களுக்கு எப்படி திருப்பதியோ முஸ்லிம்களுக்கு எப்படி மசூதியையோ அதேபோல் எங்களுக்கு மிகவும் முக்கியமான புனித தளம். இந்த சம்மத் ஷிகிர்ஜா தீர்த்தம் இதனை எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலாத்தலமாக அறிவிக்க கூடாது. அப்படி அறிவித்தால் எங்களுடைய புனிதம் கெட்டுப் போய்விடும். எனவே ஜார்கண்ட் மாநிலத்துக்கு உறுதுணையாக இருந்த ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசை கண்டித்து இந்த போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை ஜாக்குண்டு மாநில அரசுக்கு பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

MUST READ