உலகின் முதல் முறையாக நீருக்கடியில் மேஜிக் ஷோ! எங்கு தெரியுமா?
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வரும் விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க நிகழ்வை வரவேற்கும் வகையிலும் கோடை காலத்தில் பார்வையாளர்களை கவரும் வகையிலும் நீருக்கடியில் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது.

ஆகாயத்தில் பறந்து சமூக வலைதளங்களில் வைரலான பிரபல மேஜிக் மேன் விக்னேஷ் பிரபு நீருக்கடியில் மேஜிக் செய்தார் அசத்தினார். பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்டு சங்கிலியால் கை, கால், உடம்பு உள்ளிட்ட பகுதிகளில் 9 பூட்டுகளால் பூட்டபட்டும் விக்னேஷ் கைக்கும் விலங்கிட்டு 16 அடி ஆழம் கொண்ட நீருக்கடியில் விசப்பட்டார். பின்னர் சுமார் மூன்று புள்ளி ஐந்து நிமிடம் நீருக்குள் பெட்டியோடு மூழ்கிய அவர், பெட்டிக்குள்ளேயே பூட்டப்பட்ட பூட்டுகளை திறந்து வெளியே வரபெட்டியின் பூட்டை திறக்க முயற்சித்த போது வெளியே வர முடியவில்லை என்று அவர் காட்டிய சைகையால் பார்வையாளர்கள் ஆச்சிரியத்தோடும் பயத்தோடும் பார்த்தபோது நீச்சல் பயிற்சியாளர்கள் பெட்டியை உடைத்து அவரை வெளியேற்றினர்.

இதை கண்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் பார்வையாளர்கள் ரசிக்கவே பெட்டியை திறக்க முடியாத மாதிரி நடித்ததாகவும் கூறினர் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மரைன் கிங்டம் உரிமையாளர் ரவிதாஸ், மெரைன் கிண்டம்மில் விஜிபிக்கு வரும் பார்வையாளர்கள் கோடைகால விடுமுறையை கழிக்கும் வகையில் உலகில் முதல் முறையாக நீருக்கடியில் மேஜிக் ஷோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், மீன் அருங்காட்சியகத்தை பார்க்க வருபவர்கள் இலவசமாக இந்த காட்சியை கண்டு ரசிக்கலாம் எனவும் கூறினார். மேலும் இதற்கென்று தனி கட்டணம் ஏதுமில்லை எனக் கூறியவர் வார நாட்களில் நான்கு காட்சிகளும் வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் நடத்தப்படும் என கூறினார்.
