பூவிருந்தவல்லி அருகே கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் இருந்த நேரு சிலை சுக்கு நூறாக உடைத்தது

பூந்தமல்லி அடுத்த நசரத் பேட்டை சாலை சந்திப்பில் பழமை வாய்ந்த நேருவின் சிலை பீடத்துடன் அமைந்திருந்தது 1988 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை சாலையின் சந்திப்பில் பீடத்துடன் இருந்தது. தற்போது பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க நடப்பதால் இந்த சிலையை அகற்றி வைக்குமாறு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மாற்று இடம் இல்லாததால் சிலை அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த நேரு சிலையின் பீடத்தின் மீது வேகமாக மோதியது. இதில் பீடத்துடன் சேர்ந்து நேரு சிலையும் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தது. இதில் காரை ஓட்டி வந்த டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் காயம் இந்த டிரைவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் கட்சியினர் அங்கு வந்து திட்டமிட்டு நேருவின் சிலையை உடைத்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே இந்த சிலை பீடத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் இறந்து போனது குறிப்பிடதக்கது.