ஷோரூம் முன்பு காரை நிறுத்தியதால் ஷோரூம் ஊழியர்கள் காரை உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் நேற்று மதியம் தனது குடும்பத்தோடு பாண்டி பஜாரில் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது பிரபல வணிக நிறுவனமான ஹிட்டாச்சி ஷோரூம் முன்பாக சுந்தர் கார் பார்க்கிங் செய்துள்ளார். இதனால் ஷோரூம் ஊழியர்கள் சுந்தரை தர குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஷோரூம் ஊழியர்களுக்கும் சுந்தருக்கும் தகராறு எழுந்துள்ளது. பின் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஷாப்பிங் சென்று வந்துள்ளார்.
திரும்ப வந்து பார்த்தபோது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஷோரூம் பூட்டப்படிருந்துள்ளது. இதனையடுத்து ஷோரூம் ஊழியர்கள் தான் காரின் கண்ணாடியை உடைத்து இருக்க வேண்டும் எனவும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கார் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறி சுந்தர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்