spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

-

- Advertisement -

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

mkstalin

we-r-hiring

சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் வரலாற்றை தற்போதைய தலைமுறையினரும் அறிந்தக் கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர் சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தின் வளாகத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலையினையும், ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாரின் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கினையும் அவரது மார்பளவுச் சிலையையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர்களது திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மு பெ சாமிநாதன் , பொன்முடி , மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

MUST READ