சென்னையில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றுள்ளனர். முதல் மூன்று இடம்பிடித்த மாவட்டங்களுக்கு கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். 281 பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 36 தங்கம் உள்ளிட்ட 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 33 தங்கம் உள்ளிட்ட 95 பதக்கங்களுடன் கோவை மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டி தமிழ் நாட்டில் பொிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பயிற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் விளையாட்டில் வெல்ல முடியும் என்றும் கலைஞரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வா் செயல்பட்டு வருகிறாா் என்றும் சென்னையில் நடைபெற்று முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழாவில் துணைமுதலமைச்சா் உதயநிதி பேசினாா். மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் துணை முதல்வா் கூறினாா்.
தவெக – வின் முடிவை பாராட்டுவோம்… துயரில் தோள் கொடுப்போம்… சேரன் வெளியிட்ட பதிவு!