spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள்... அறிவிப்பு ஒத்திவைப்பு...

ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள்… அறிவிப்பு ஒத்திவைப்பு…

-

- Advertisement -
ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் அடுத்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்கள் கழித்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வௌியாகின. இதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

இதுதவிர மற்றொரு திரைப்படம் ஹண்டர். மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இந்நிலையில், தனது ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். இரண்டு திரைப்படங்களின் அப்டேட் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்கள் கழித்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ