- Advertisement -
28 வயதில் இளம் இசை அமைப்பாளர் பிரவீன்குமார் இன்று உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கில் இசை அமைப்பாளர்கள் இருந்தாலும், அதில் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில் கோலிவுட் சினிமாவின் இளம் இசை அமைப்பாளர்களில் ஒருவர் பிரவீன்குமார். இவர் இராக்கதன், மேதகு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து பிரபலம் அடைந்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரவீன் குமார், சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். 28 வயதில் பிரவீன் குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
