spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை சீதா வீட்டில் 4.5 சவரன் தங்க நகை திருட்டு, வீட்டில் வேலை செய்பவா்களிடம்...

நடிகை சீதா வீட்டில் 4.5 சவரன் தங்க நகை திருட்டு, வீட்டில் வேலை செய்பவா்களிடம் போலீஸார் விசாரணை

-

- Advertisement -
kadalkanni

நடிகை சீதா வீட்டில் அவரது தம்பி மனைவி கல்பனா என்பவரின் 4.5 சவரன் தங்க நகை தனது கைப்பையில் வைத்து வீட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் எழுந்து பார்த்த போது பையில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா உடனே இது குறித்து நடிகை சீதாவிடம் தெரிவித்துள்ளார்.வீடு முழுக்க தேடியும் நகை கிடைக்காததால் நடிகை சீதா திருடு போன நகையை கண்டு பிடித்து தாறுமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.நடிகை சீதா வீட்டில்  4.5 சவரன் தங்க நகை திருட்டு, வீட்டில் வேலை செய்பவா்களிடம் போலீஸார் விசாரணை

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் நடிகை சீதா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.. கடந்த தீபாவளியன்று 30/10/24 நடிகை சீதாவின் தம்பி மனைவி கல்பனா என்பவர் தனது தங்க செயின், ஜிமிக்கி என 4.5 சவரன் எடையுள்ள தங்க நகைகளை தனது கைப்பையில் வைத்து வீட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார்.. மறுநாள் எழுந்து பார்த்த போது பையில் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த கல்பனா உடனே இது குறித்து நடிகை சீதாவிடம் தெரிவித்துள்ளார்.. பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வீடு முழுக்க தேடியும் நகை கிடைக்காததால் நடிகை சீதா திருடு போன நகையை கண்டு பிடித்து தாறுமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடிகை சீதா வீட்டில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கூட்டணியின் புதிய படம்….. சைலன்டாக நடந்து முடிந்த பூஜை!

MUST READ