Homeசெய்திகள்சினிமாஆர்யா, சந்தானம் கூட்டணியின் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை!

ஆர்யா, சந்தானம் கூட்டணியின் ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை!

-

- Advertisement -

ஆர்யா, சந்தானம் கூட்டணியில் உருவாகும் டிடி ரிட்டன்ஸ் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ஆர்யா, சந்தானம் கூட்டணியின் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை!

நடிகர் சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லுக்குதுட்டு எனும் காமெடி கலந்த ஹாரர் திரில்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக 2019ல் தில்லுக்கு துட்டு 2 திரைப்படமும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகமாக டிடி ரிட்டன்ஸ் எனும் திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வாறு சந்தானம் நடிப்பில் உருவாகும் காமெடி கலந்த ஹாரர் திரில்லர் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதால் மீண்டும் ஒரு ஹாரர் படத்தை கையில் எடுத்துள்ளார் சந்தானம்.ஆர்யா, சந்தானம் கூட்டணியின் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தில் இணைந்த சர்ச்சை நடிகை! அதன்படி டிடி ரிட்டன்ஸ் 2 என்று சொல்லப்படும் இந்த புதிய படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்து, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்க இதன் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை கஸ்தூரி இணைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. நடிகை கஸ்தூரி சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ