பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாதத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 2023 இல் வெளியான ஜெயிலர் திரைப்படம் இமாலய வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 10ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட இருப்பதாகவும் அதைத்தொடர்ந்து தேனி, கோவாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் அவர்களிடம் பெற்ற காட்சிகள் திரையரங்கை அதிரவைத்தது.
அடுத்தது மோகன்லால், சிவராஜ்குமார் ஆகிய இருவருமே ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்க உள்ள தகவல் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளன. எனவே அந்த பாலிவுட் நடிகர் யாராக இருக்கும் என ரசிகர்கள் பலரும் யோசிக்க தொடங்கிவிட்டனர். அதன்படி சல்மான் கான் அல்லது ஷாருக்கான் ஜெயிலர் 2 படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.